தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது, 12 நாட்கள் நடைபெறக்கூடிய இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாசித் திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு உருகு சட்ட சேவையும் நடை பெற்றது. தொடர்ந்து சரியாக சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் 8.45 மணி அளவில் சண்முக விலாஸ் மண்டபத்தில் இருந்து குளிர்ச்சி தரும் வெட்டி வேர் சப்பரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் எழுந்தருளினார். 


நேர் மறை எண்ணங்களையும் அழித்து செல்வ வளத்தையும் தந்திடும் வெட்டி வேர் அலங்காரத்தில் உற்சவர் சன்முகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற பக்தர்களின் அரோகரா கோசங்களுக்கு முழங்க பக்தர்களுக்கு உற்சவர் சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் காட்சி அளித்தார். இதனையடுத்து சுவாமியும் அம்பாளும் தூண்டிகை விநாயகர் கோவில் அருகேயுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு வந்தடைந்த பின்பு அங்கு அவருக்கு பால் மஞ்சள் விபூதி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் அலங்கார தீபாராதனையும் நடைபெறவுள்ளது.


மேலும் படிக்க | TN Agriculture Budget 2024: லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி... விரைவில் நிவாரணம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!


சுவாமி சண்முகர் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி வரும் காட்சியை பல்லாயிக்கணக்கானோர் பக்தர்கள் கண்டு மகிழ்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஒட்டுமொத்த கிராமமே நடைபயணமாக சென்று சாமி தரிசனம்:
இதனிடையே முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாசி திருவிழா முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறார்கள். அதன்படி நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த ஆவுடையாள்புரம் கிராமத்தில் உள்ள 300 பொதுமக்கள் இன்று தங்களின் கிராமத்திலிருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். வீட்டில் நடக்க முடியாத வயோதிக முதியோர்களை தவிர மீதமுள்ள ஊரில் வசித்துவரும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வருடந்தோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மாசி திருவிழாவையொட்டி பாதயாத்திரை மேற்கொண்டு வருவது வழக்கம். 


இந்த கிராமத்தில் மட்டுமே அனைவரும் மூன்று நாட்கள் திருச்செந்தூரில் தங்கி இருந்து தேரோட்டம் முடிந்தபிறகே அவரவர் வீட்டிற்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் குழுக்களாக சென்றாலும் இந்த ஊரில் மட்டுமே ஒற்றுமையாக ஒட்டுமொத்த கிராம மக்கள் அனைவரும் நடை பயணம் மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனை தரிசித்து வருவது சிறப்பு ஆகும்.


மேலும் படிக்க | பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்த அமைச்சரால் டாஸ்மாக்கிற்கு விதிக்க முடியவில்லை - அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ