குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். அவர்களில் பலர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக  இருந்ததால், மற்ற தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து TNPSC அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


அதன் பிறகு இந்த முறைகேடு தொடர்பாக DGPபி திரிபாதியிடம் TNPSC புகார் அளித்தது. இந்த புகாரை CBCID போலீசாருக்கு DGP திரிபாதி அனுப்பி வைத்தார். அதன்படி CBCID போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் சிக்கந்தர் பபிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். 


இந்நிலையில், குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 பேர் தகுதிநீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களை ஆய்வுசெய்ததில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 2 மையங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்திலு தவறு நடக்கவில்லை.  


ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இடைத்தரகர்கள் உதவியுடன் 99 பேர் குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, 99 தேர்வர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 99 பேர் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் தவறுகள் நடக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.