`படிக்க சொன்னனதால்` தலைமையாசிரியருக்கு மாணவர் கத்திகுத்து!!
அரசு உதவி பெறும் பள்ளியின் `படிக்க சொன்னனதால்` தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவர் தப்பியோடி சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியரை அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் என்பவன் பிளேடு கத்தியால் தலைமை ஆசிரியரின் வயிற்றைப் பயங்கரமாகக் கிழித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
திருப்பத்தூர் ராமகிருஷ்ண அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார் பாபு. இவர் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடமும் நடத்தி வருகிறார்.
இன்று பாபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் சம்பந்தமான செய்முறை வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது, சரியாகச் செய்முறை செய்யாத ஹரிகரன் என்ற மாணவனையும் சக மாணவர்களையும் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ஹரிகரன் வேதியியல் ஆய்வுக்கூடத்திலேயே தலைமை ஆசிரியர் பாபுவை பிளேடு கத்தியால் வயிற்றைக் கிழித்துவிட்டு பள்ளியை விட்டு தப்பியோடியுள்ளான்.
தப்பியோடிய ஹரிகரனை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதன் பின்பே ஆசிரியரைக் குத்தியதின் முழு விவரம் தெரியவரும் எனப் போலீஸ் தரப்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.