ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு!
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர், கடந்த 10 வருடங்களாக கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர், கடந்த 10 வருடங்களாக கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
கணேசனிடம் 13,000 பணம் பெற்று இருந்ததாகவும் தனியாக தொழில் செய்ய போகிறேன் என கூறி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடுத்த பணத்தை கணேசன் கேட்டு வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காளிமுத்து பத்து பேருடன் வந்திருந்தவர் கணேசனை தாக்கியதுடன் அவரது மகனை பிளேடால் கீறியதாகவும், நீ வெளியூர் ஆள் இங்கு தொழில் செய்ய கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ | நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்
இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் அடங்கிய பாட்டிலுடன் வந்த தம்பதியினரிடம் பணியில் இருந்த காவலர்கள் அதனை பறித்தனர்.
இதன் பின்னர் அவர்கள் கொண்டு வந்த மனுவை ஆட்சியரிடம் அளிக்க அழைத்து சென்றனர். கணேசன்-முத்துமாரி தம்பதியினர் கூறுகையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் இந்த விவகாரம் காரணமாக பள்ளிக்கு செல்ல தங்களது மகன் அச்சபடுவதாக தெரிவித்தவர்கள் பாதுகாப்பு அளிப்பதுடன் தங்களை அச்சுறுத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ALSO READ | PUBG GAME: பப்ஜி மதனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Telegram Link: https://t.me/ZeeNewsTamil