ராமநாதபுரம்: கமுதி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான கருப்பு சிவப்பு நிறத்திலான 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செய்யாமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் வைகை நதியின் கிளை நதியான பரளை ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பெய்த மழையின் போது, ​​ஏற்கெனவே சீரமைக்கும் பணி தொடங்கியதால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரும், பட்டதாரியுமான முருகானந்தம் என்பவர் மண்ணில் சிதைந்து புதைந்திருந்த நிலையில் வெளியில் தென்பட்ட முதுமக்கள் தாழிகளை கண்டுள்ளார். பின்னர், அவை என்ன என்பதை அறிந்துகொள்ள அவற்றை தோண்டி எடுத்துள்ளார். அதில், பல்வேறு நிறத்தில் மண், சிறிய கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மண் குவளைகள், எலும்புக்கூடுகள், இரும்புக் கம்பிகள் போன்றவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?



அதேபோல் ஒரு முதுமக்கள் தாழியில் இரண்டு சின்ன பானைகளும் அதன் உள் சில இரும்பு துண்டுகளும் கிடைத்துள்ளன. அப்பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து இருப்பதால் அதன் வேர்களால் முதுமக்கள் தாழிகள் அனைத்தும் உடைந்த நிலையில் கிடைக்கின்றன.


மேலும் படிக்க | நான் முதல்வன் திட்டம்: புதிய படிப்புகளை சேர்க்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்யாமங்கலம் கிராமத்திற்கு வந்து முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்து முன்னோர்கள் வாழ்ந்த இடம் மற்றும் முக்கிய தகவல்களை வெளிக்கொணர வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


செய்யாமங்கலம் கிராமத்தின் அருகே மேலக்கொடுமலூர் என்னும் ஊரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பண்ணை குட்டை வெட்டும் போது ஏழு முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. மேலும் தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இறந்த முதியவர்களை அடக்கம் செய்வதற்காக இந்த முதுமக்கள் தாழிகள் பண்டைய தமிழர்களின் நடைமுறையில் இருந்துள்ளதாக கூறுகின்றனர்.


மேலும் படிக்க | ஆளுநர் ரவிக்கு ‘திராவிட’ வகுப்பெடுத்த டி.ஆர்.பாலு!.


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ