சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நதிகளுக்கும் என்ன வேலை என குறிப்பிட்டு கோவை நகரின் பல்வேறு இடங்களில் தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் புகைபடங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சசிகலாவுக்கு நிவாரணம்: வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்



மேலும் படிக்க | தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீதித்துறையினருக்கான விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திறந்து வைத்தார். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு கோவை வந்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.


மேலும் படிக்க | ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு துடிப்பது ஏன்?... அன்புமணி ராமதாஸ் கேள்வி



மேலும் படிக்க | தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!


அந்த போஸ்டர்களில் "சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்னடா வேல?" என குறிப்பிட்டு இருப்பதுடன் அதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி. டி .ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றது. இந்த போஸ்டரானது தற்பொழுது மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்; மகிழ்ச்சியில் உறவினர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ