ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என கமல்ஹாசன் பேச்சு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் பார்திபவன் நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசும்போது தன் மீது செருப்பு வீசப்பட்டதையும் காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். 


இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ஒரு சமயத்தில் காந்தி ரயிலில் பயணிக்கும் போது தவறுதலாக அவருடைய ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. பின்னர் என்ன செய்வது என்று சற்றும் யோசிக்காமல் அடுத்த செருப்பையும் எடுத்து அதனை கீழே போட்டார். ஏன் இன்னொரு செருப்பையும் கழட்டிப் போட்டார் எனக் கேட்கப்பட்டபோது, ஒரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்த செருப்பையும் கழட்டி போட்டால், யாருக்காவது அது உதவும் அல்லவா? என தெரிவித்தார். அதுமட்டும் இன்றி, ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து; அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்து இருந்தார். இதனால் அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. அதன் பின் அவர் கலந்து கொண்ட இன்னொரு பிரச்சாரக் கூட்டத்தில், பொதுமக்களில் சிலர் அவர் வந்த வாகனத்தின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.