நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண்டபம் ஒன்றில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


இந்த அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ படிப்புகளை மேற்கொள்ள தடைக்கல்லாய் இருக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.


அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட 23 தீர்மானம்:


> சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி.


> விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு.


> இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.


> உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.


> அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.


> மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய  பிரதமர் மோடிக்கு நன்றி.


> பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழக அரசுக்கு > பாராட்டு.


> நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.


> அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். 


> தொழில் முதலீடுகளை ஈர்க்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டு பயணம் ஆகியவற்றிற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.


> தமிழ்நாடு நாள் கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.


> கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்த தமிழக அரசுக்கு பாராட்டு.


> இலங்கை தமிழர்களின் சமஉரிமையை உறுதி செய்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.


> காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை.


இதற்கிடையே, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் உட்கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர், தற்போதைய நிலையில், 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.