தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஒரு நாள் தொற்றின் அளவு, மெல்ல மெல்ல குறையத் தொடங்கி, தற்போது 3,500க்கும் கீழே வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் கொரோனா பரவலை (Corona Spread) கட்டுபடுத்த தமிழகத்தில் தளர்வுகள் கொண்ட ஊரடங்கு (TN Lockdown) அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


ALSO READ | Covid-19 பரவலை தடுக்க N95 முகமூடிகள் சிறப்பாக செயல்படுகிறது: இந்திய விஞ்ஞானிகள்!


அதன்படி சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம், 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் போடப்படாத நிலையில், ஒரு மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது இரண்டாம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.


ALSO READ | எச்சரிக்கை: கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ் மீன்கள் மூலம் பரவ வாய்ப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR