Aadi amavasai Latest Updates : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை உகந்த நாள் என்றாலும், தை, ஆடி போன்ற அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு எள் பிண்டம் திதி கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைவதுடன், குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால், தை, ஆடி மாத அமாசவாசை தினங்களில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்தவகையில், ஆடி அமாவாசை தினமான இன்றும் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் புனித தலங்களில் மக்கள் முன்னோர்களுக்கு அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்? பித்ரு கடன் தீர்க்கும் வழி...


குறிப்பாக தமிழ்நாட்டின் காசி என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்கின்றனர். பொதுவாகவே, ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக மாத அமாவாசை நாள்களில் மக்களின் வருகை கூடுதலாக இருக்கும். அப்போது, தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுப்பார்கள். 


இப்படியான திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் இந்தியா முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி விட்டு சாமி மற்றும் அம்பாளை தரிசனம் பெற்று செல்கின்றனர். 


கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச் செயலும் ஈடுபடாமல் இருப்பதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், தூத்துக்குடி துறைமுகப்பகுதியிலும் ஆடி அமாவாசை திதி கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புதிய துறைமுக கடற்கரை பகுதியில் அதிகாலை 4 மணி முதல் புனித நீராடி வரும் பக்தர்கள், பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அப்போது, எள் மற்றும் தண்ணீரைக் கொண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். புதிய துறைமுகம் கடற்கரையில் பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். புதிய துறைமுகம் கடற்கரை பகுதிக்குள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.


மேலும் படிக்க | கோவை : வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r