தனியார் பேருந்து மீது மோதி நொறுங்கிய 108 ஆம்புலன்ஸ் 2 பேர் பரிதாப பலி
வேகமாக வந்த 108ஆம்புலன்ஸ் பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியது. பேருந்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்சில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் செய்தி: தனியார் பேருந்தின் மீது மோதிய 108 ஆம்புலன்ஸ் விபத்து சம்பவ இடத்திலே இரண்டு பேர் பலியான நிலையலி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் 6 பேர் சென்றுள்ளனர்.
108 வாகனத்தை ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டியுள்ளார். செவிலியராக சத்தியா ஆம்புலன்ஸில் வந்துள்ளார். ஆம்புலன்ஸ் திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி என்ற பகுதிக்கு வரும் போது முன்னே சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் திடீரென பேருந்தை நிறுத்தி உள்ளார்.
இதனால் நோயாளிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 108ஆம்புலன்ஸ் பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியது. பேருந்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்சில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 108 செவிலியர் சத்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR