ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்கவரும் குடும்ப அட்டைதாரரை அலைக்கழிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூட்டியதாவது.,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை (One Nation One Ration Card) திட்டத்தை‌ மத்திய அரசு அறிமுகத்திய பின்‌ விரல்‌ ரேகை சரிபார்ப்பு முறையில்‌ நியாய விலைக்கடைகளில்‌ இன்றியாமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளுக்குச்‌ செல்ல இயலாதவார்கள்‌ இதற்கென உரிய படிவத்தில்‌ அவரால்‌ அத்தாட்சி செய்யப்பட்ட நபரின்‌ விவரத்தைப்‌ பதிந்து நியாய விலைக்கடையில்‌ (Ration Shops) கொடுத்து அந்த நபரின்‌ வாயிலாக உணவுப்‌ பொருட்கள்‌ பெறுவது தொடர்பான விரிவான அறிவுரைகள்‌ ஏற்கனவே ஜனவரி 2021 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன.


ALSO READ | ரேஷன் கார்டு அப்டேட்: செப்டம்பர் 30க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும்


இதற்கான படிவங்களை இருப்பு வைத்து தேவைப்படும்‌ அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையிலேயே விநியோகித்து பூர்த்தி செய்து பெற்று தொடர்புடைய நடவடிக்கைகள்‌ அனைத்தையும்‌ நியாய விலைக்கடை பணியாளரே மேற்கொண்டு அட்டைதாரரின்‌ அங்கீகரிக்கப்பட்ட நபர்‌ வாயிலாக உணவு பண்டங்கள்‌ விநியோகிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரப்‌ படிவம்‌ இத்துறையின்‌ www.tnpds.gov.in என்ற இணையதளத்தில்‌ பொது மக்கள்‌ பயன்படுத்தும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ளது.


இதை உரிய முறையில்‌ செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும்‌ சுற்றறிக்கை மார்ச்‌ 2021 மாதத்தில்‌ அனுப்பப்பட்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌ அநேக முதியோர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ தொடர்ந்து பயன்‌ பெற்று வருகின்றனர்‌. இதற்கெனவே விற்பனை இயந்திரத்தில்‌ கைரேகை சரிபார்ப்பு இல்லாமல்‌ குடும்ப அட்டையினை மட்டும்‌ ஸ்கேன்‌ செய்து விற்பனைப்‌ பரிவர்த்தனையினை பதிவேட்டில்‌ அங்கீகரிக்கப்பட்ட நபரின்‌ கையொப்பம்‌ பெற்று அவரிடம்‌ பொருட்கள்‌ வழங்க வழிவகை செய்யப்பட்டிள்ளது. 


இது தொடர்பாக உணவு மற்றும்‌ உணவு வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களும்‌ சட்டப்பேரவையில்‌ 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள்‌ யாரும்‌ வந்து கைரேகை பதிந்து பொருட்களைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌, நியாய விலைக்‌ கடைக்கு வர முடியாதவர்கள் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள்‌ வழியாகப்‌ பொருட்களைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என்றும்‌ தெரிவித்துள்ளார்கள்‌.


அதன்படி ரேஷன் பொருட்களை வழங்க அதிகாரிகள் மறுப்பதாக வந்த புகாரையடுத்து, உணவுப்பொருள் வழங்கல்துறை சார்பில் இந்த எச்சரிக்கையானது சுற்றறிக்கை வழியாக தரப்பட்டுள்ளது. எனவே ரேஷன் பொருட்களை வாங்கவரும் குடும்ப அட்டைதாரரை அலைக்கழிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையுள் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | புதிய ரே‌ஷன் கார்டு: தமிழகத்தில் 3 லட்சம் பேர் விண்ணப்பம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR