சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்படும் மருத்துவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே விதிகள் வகுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

 

கவனக்குறைவாக செயல்படும் மருத்துவர்களுக்கு எதிராக புகார் அளிக்கும் போதும், வழக்குப்பதிவு செய்யும் போதும், அரசு மருத்துவர்களின் கருத்துக்களை பெற வேண்டும். மருத்துவர்களுக்கு எதிராக உடனடி கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

 

இந்நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் சென்னை ஐக்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 

 

2008ம் ஆண்டு ஜூலை மாதமே இது தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசு மருத்துவமனைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து மாதம் தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தி இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை  அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.