ஜெயலலிதா உடலுக்கு நடிகர் அஜித் அஞ்சலி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
அரசியல்வாதி, சினிமா நடிகர்கள், பொது மக்கள் என லட்சகணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஏராளமான பொது மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் இன்று அதிகாலை ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.