நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்பு மனு தாக்கல் செய்தபோதே நடிகர் சேரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் நடிகர் விஷால் பதவியை ராஜினாமா செய்யும்வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாகவும் கூறி இருந்தார். நடிகர் சேரன் இரண்டாவது நாளாக தனது உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சேரன்:- ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவது மற்றும் பல தொடர் நடவடிக்கைகளுக்கும் அரசியல் கட்சிகளின் திறப்பை சம்பாதிக்கும் வகையில் உள்ளது. இது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தயாரிப்பளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். 


இதனால் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல திரையுலகமே ஒட்டுமொத்தமாக அழியும். இதைக்கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 


இப்போராட்டத்தில் நடிகர் சேரன் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, விஷால் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று சேரன் கோரிக்கை வைத்துள்ளார். பதவியில் இருந்து இந்த உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்று சேரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.