மக்களுக்காக உழைக்க முன்வந்ததே கமலின் வெற்றி: கமலை பாராட்டிய பார்த்திபன்
துவக்கம் முதலே கோவை தெற்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்த தொகுதியாக இருந்துள்ளது. கமல்ஹாசன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களின் பரப்புரைகளால் தொகுதி களைகட்டியது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. சில தொகுதிகளில் மட்டும் இறுதி முடுவுகள் வரவேண்டிய நிலையில், திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கப்போவது தெளிவாகியுள்ளது.
ஐந்துமுனைப் போட்டியாக நடந்த இந்த தேர்தலில் (Election) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் தோல்வியைக் கண்டனர்.
எனினும், கமலின் (Kamal Haasan) தோல்வி சற்று மாறுபட்டுள்ளது. அவரது தோல்வியிலும் ஒரு சிறு வெற்றி ஒளிந்திருக்கிறது.
இதனிடையே, நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் "திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே” என்று பதிவிட்டுள்ளார்.
ALSO READ: கோவை தெற்குத் தொகுதியில் பிஜேபியின் வானதி வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி
துவக்கம் முதலே கோவை தெற்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்த தொகுதியாக இருந்துள்ளது. கமல்ஹாசன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்களின் பரப்புரைகளால் தொகுதி களைகட்டியது.
தேர்தல் வாக்கு என்ணிக்கையிலும், இந்த தொகுதி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ம.நீ.ம-வின் கமல்ஹாசன், பாஜக-வின் (BJP) வானதி சீனிவாசன், காங்கிரசின் மயூரா எஸ். ஜெயகுமார் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
மூவரும் மாறி மாறி முன்னணியில் இருந்த நிலையில், மாலையில் தொடர்ந்து கமல் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். எனினும், இறுதியில், சுமார் 1500 வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கமல்ஹாசன் தோற்றாலும், அதிக அளவிலான மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
ALSO READ: மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR