இளைய தளபதி விஜய்யின் சந்திரலேகா படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் P.R. நம்பிராஜின் இளைய மகன் தினேஷ் சாம். இவர் அறுவடை என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் P.R. நம்பிராஜின் நிலா, சந்திரலேகா, உதயமாகிறது, மஞ்சள் நிலா, அன்பே ஓடி வா, குங்குமபொட்டு, ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார்.


S.J சூரியாவின் உதவியாளர் லாரன்ஸ் ராம் இயக்கும் திரைப்படம் அறுவடை. இத்திரைப்படம் இன்றைய விவசாயிகளின் துயரை சொல்லும் படமாக கதைக்களம் அமைகிறது.  


இத்திரைப்படத்தில் மிர்ச்சி செந்தில், மலையாள நடிகை வைகா போன்றோர் நடித்துள்ளனர்.


இத்திரைப்படத்தின் ஒளிபதிவாளர் எழில் செல்வன். இசை ரவி விஜய் ஆனந்த். பின்னனி இசை மரியா மனேகர். கங்கை அமரன், பார்த்தி பாஸ்கர், மோகன்ராஜா பாடல் எழுதிருக்கின்றனர். 


இப்படத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கூறும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் விவசாயிகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் வில்லனாக இயக்குனர் தயாரிப்பாளர் P.R. நம்பிராஜின் மகன் தினேஷ் சாம் நடித்துள்ளார்.