தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவியுடன் சேர்ந்து திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அடிக்கடி வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த  ஆண்டு சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். பின், கடந்தாண்டு ஜூலை மாதம் மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார்.


இந்நிலையில் தற்போது மீண்டும் இவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது அவர் தனது திருமண நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.