Actress Gautami Issue: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பாஜகவில் இருக்கும் அழகப்பன் என்பவர் தனது சொத்துக்களை அபகரித்துவிட்டதாக கூறியிருந்தார். மேலும், அழகப்பனுக்கு கட்சி மூத்த நிர்வாகிகள் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனவேதையுடன் விலகல்


மேலும் அதில் அவர்,"2021ஆம் ஆண்டு தேர்தலில் கட்சிக்காக ராஜபாளையம் தொகுதியில் பணியாற்றினேன். ஆனால் சீட் கிடைக்கவில்லை. பாஜக கட்சியில் எனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. மிகுந்த மனவேதனையுடன் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை கௌதமி தனது நிலத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறியிருந்த அழகப்பன் உட்பட அவர் குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு பதிவு செய்துள்ளனர். நடிகை கௌதமி கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார்.


மேலும் படிக்க | அமர்பிரசாத் ரெட்டி கைது எதிரொலி... உடனே ஜே.பி. நட்டா அமைத்த குழு - பின்னணி என்ன?


புகாரும் வழக்கும்


அந்த புகாரில் அந்த புகாரில் ஆறு நபர்கள் தன்னை ஏமாற்றி 25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்ததாகவும் தனக்கு நிலத்தையோ அல்லது அதற்குரிய இழப்பீட்டையோ பெற்று தருமாறு குறிப்பிட்டு இருந்தார். இப்புகார் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த வகையில், இன்று அழகப்பன் உட்பட அவரது குடும்பத்தினர் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அழகப்பன் அவரது மனைவி ரக்சல் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, பாஸ்கர் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மீது மோசடி, நில அபகரிப்பு தொர்பான 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


போலீசாரிடம் கௌதமி விளக்கம்


நடிகை கௌதமி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது சம்பந்தப்பட்ட நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு பவர் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பிலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நடிகை கௌதமி இரண்டு முறை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மற்றும் தனது தரப்பு விளக்கங்களை கொடுத்திருக்கிறார். அப்போது காவல்துறை தரப்பில் கௌதமியிடம் எப்படி மோசடி நடைபெற்றது, மோசடி செய்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட சொத்தின் மதிப்பு எவ்வளவு மற்றும் அந்த நிலம் எவ்வளவு ஏக்கர் என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


தமிழகம் வரும் பாஜக குழு


தொடர்ந்து, பாஜகவில் இருந்து நடிகை கௌதமி இன்று காலை விலகிய நிலையில், அவர் புகார் அளித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து பாஜகவின் மீது வழக்கு செய்யப்பட்டு வருவது குறித்து விசாரிக்க மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையரும் தற்போதைய பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்யபால் சிங், முன்னாள் கர்நாடக முதலமைச்சர் சதானந்த கவுடா உட்பட நான்கு பேர் கொண்ட குழு தமிழகம் வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவி செய்கிறது - அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ