திமுகவை குலத் தொழிலாக தாத்தா அப்பா மகன் வழியிலே குலத்தொழிலாக நடத்தி பதவிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனை பற்றி பேச எந்த அருகதையும் தகுதியும் கிடையாது என விழுப்புரம் மாநிலங்கள் அவை உறுப்பினர் சிவி சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.  விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் இன்று வழுதிரெட்டி 33 வது வார்டு பகுதியைச் சேர்ந்த வேலவன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் சிவி சண்முகம் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர், புதிதாக கட்சியில் இணைதவற்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த விழுப்புரம் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்


சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம்  என்ற பெயரிலேயே இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற உதயநிதி அவர் எப்படி இந்த பதவிக்கு வந்தார்? சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற ஒன்று குலத்தொழில் இன்று திமுகவை குலத் தொழிலாக தாத்தா அப்பா மகன் வழியிலே குலத்தொழிலாக நடத்தி பதவிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதனத்தை பற்றி பேச எந்த அருகதையும் தகுதியும் கிடையாது, திமுகவே ஒரு டெங்கு தான் திமுக ஒழிந்தால் தான் தமிழ்நாட்டில் டெங்கு ஒழியும் என பேட்டி அளித்தார்.


மேலும், உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள 18 மடாதிபதிகளில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என மதுரையில் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.  மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "டாஸ்மாக் கடைகளால் தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடும் வரையில் புதிய தமிழகம் போராட்டத்தை நடத்தும், புதிய தமிழகம் கட்சியின் 26 ஆம் ஆண்டை முன்னிட்டு டிசம்பர் 15 ல் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது, அக்டோபர் 2 முதல் தமிழகம் முழுக்க மது ஒழிப்பு பிரச்சாரத்தை நடத்த உள்ளோம், சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெளிவாக கூறவில்லை, சனாதனத்தில் உள்ள குறைபாடுகளை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக் காட்டவில்லை, நீதிமன்றமே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர வேண்டும், கருத்துகளால் மக்களை பிளவுப்படுத்த திமுக நினைக்கிறது, 


சனாதனம் சொல் அளவிலும், எழுத்து அளவிலும் எந்தவொரு தவறுமில்லை, உதயநிதி ஸ்டாலின் சனாதன சர்ச்சை பேச்சுக்கு தமிழகத்தில் உள்ள 18 மடாதிபதிகளில் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்பை உள்ளடக்கியதே சனாதனம், சனாதனம் குறித்த பேச்சுக்கு திமுக பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு இனிமேல் சனாதனம் குறித்து பேச கூடாது, இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் அம்மக்களின் கோரிக்கை, ஆனால் திமுக தேவேந்திர குல வேளாளர் மக்களிடம் ஒளிந்து கொள்வதற்காக மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளது, இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதில் காவல்துறை குளருபடி செய்துள்ளது, எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை மரியாதை செலுத்தவிடவில்லை" என கூறினார்.


மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ