மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும்  நடித்துள்ள மாமன்னன் படம்  தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.  பிரபலங்களை தொடர்ந்து படம் பார்த்த ரசிகர்கள் மாமன்னன் ஒரு பவர்ஃபுல் அரசியல் படம், மனதை பாதிக்கும் காட்சிகள் நிறைந்த படமாகவும், இடஒதுக்கீடு குறித்தும் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும் தங்கள் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை ஒப்பிடும் போது மாமன்னன் திரைப்படம்  மனதை பாதிக்கும் உருக்கமான காட்சி  நிறைந்த படமாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மன்னனாக மகுடம் சூடினாரா மாரி செல்வராஜ்? மாமன்னன் திரைவிமர்சனம்!


மேலும், இதுவரை காமெடி நடிகராக மட்டுமே பார்த்த ரசிகர்களும், நடிகர் வடிவேலுவை உண்மையான மாமன்னன் இவர்தான் என்று ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாரட்டி வருகின்றனர்.  திரைக்கு வருவதற்கு முன்பே பல சர்சைக்குள்ளான மாமன்னன் திரைப்படம் சாதிய ரீதியான படம் என பேசப்பட்டு வந்தது. ஆனால் அரசியலில் சாதிய ரீதியாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளதாக பலர் தற்போது கூறி வருகின்றனர்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தேவர்மகன் படத்து கதைய சொல்லி தென் மாவட்டத்து பக்கம் திசை திருப்பி, மேற்கு மாவட்டம் பக்கம் தாக்குதலை தொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். தனித்தொகுதியான காசிபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நபர் தலித் என்பதால், அந்த கட்சியின் மாவட்டச்செயலாளர் முன் உட்காரக்கூட முடியாமல் போகிறார். அப்படிப்பட்ட தலித் சட்டமன்ற உறுப்பினரை சபா நாயகராக அறிவித்து,எல்லோரையும் எழுந்து நிற்க வைத்து அசத்தியுள்ள கதைதான் ’மாமன்னன்’ என்று பதிவிட்டுள்ளார்.


இவர்களைத் தொடர்ந்து படம் பார்த்த  ரசிகர் ஒருவர் 'மாமன்னன்' படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திரத்தை பார்க்கும் போது அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் திரு.ப.தனபால் அவர்களின் வாழ்க்கை போன்றே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணம் படத்தில் வரும் சேலம் மாவட்டம் 'காசிபுரம்' என்ற சட்டமன்ற தனித்தொகுதியை, உண்மையில் நாமக்கல் மாவட்டம் 'இராசிபுரம்' தொகுதியை குறிப்பதாகவே பார்க்கிறேன்.  அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  வடிவேலு காசிபுரம் தனி தொகுதியில் வெற்றி பெற்று சபாநாயகராக அமர்கிறார். உண்மையில் ப.தனபால் அவர்களும் ராசிபுரம் தனித்தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு துணைசபாநாயகராக பதவியேற்றார்.



வெற்றிபெற்றாலும், தான் பட்டியல் வகுப்பை சார்ந்தவன் என்பதால் தன் வீட்டில்  சாப்பிட கூட தயங்குகிறார்கள் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம்  கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகே அவரை உணவுதுறை அமைச்சராக்கி பின்பு அனைவரும் வணங்கும் சபாநாயகராக அமரவைத்துள்ளார் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று கருத்தை பதிவிட்டுள்ளனர். மேலும், மாமன்னன் படம் குறித்து பேசிய தனபால், " மாமன்னன் படம் இன்னும் நான் பார்க்கவில்லை, எனக்கு தெரிந்தவர்கள் தகவல் சொன்னார்கள். 1972ல் இருந்து அரசியலில் இருக்கிறேன், அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பை பார்த்து கட்சியில் அமைப்பு செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார், என்னுடைய சாயலில் இந்த படம் வந்து இருந்தால் இது அம்மாவிற்கு கிடைத்த வெற்றி" என்று கூறி உள்ளார்.  எந்த சாதிய வன்மமில்லாமல் சமத்துவத்துக்கான அரசியலை பேசியிருக்கும் ’மாமன்னன்’ அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.


மேலும் படிக்க | திமுக பண்ணுலாம் தப்பு தப்பு தான்... டக்குனு சீமான் டயலாக்கை பேசிய உதயநிதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ