திமுக, அமமுக கட்சிகளை தவிர அதிமுக கூட்டணிக்கு யார் வேண்டுமென்றாலும் வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்., அதிமுக கூட்டணிக்கு திமுக, அமமுக கட்சிகளை தவிர பாமக உள்பட யாரும் வரலாம் என தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணிக்காக தங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜட் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு... ஏழை, நடுத்தர மக்கள் பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும் எனவும் பதிலளித்தார்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடரபாக திமுக தலைவர் ஸ்டாலின் விமரசனத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலினின் கருத்து தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும் என தெரிவித்தார்.


டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க கூடாது என அதிமுக எதிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு., அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு பொதுவான சின்னத்தை சட்டப்படி ஒதுக்க இயலாது என்பதற்காகவே என தெரிவித்த ஜெயக்குமார் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும் எனவும் தெரவித்தார்.


கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்க., கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முழுமையாக முடிந்த பின் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும், பாஜக உடன் கூட்டணி அமைக்க எந்த நிர்பந்தமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.