பாஜக குறித்து முன்னாள் அமைச்சர் பொன்னையனின் விமர்சனம் சர்ச்சைகள் அடங்குவதற்குள் செல்லூர் ராஜூ அடுத்த திரியை கொளுத்தி போட்டுள்ள சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-


மதுரை மாநகராட்சி ஆணையர் வேகமாக செயல்பட வேண்டும். ஆனால், மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது. மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டரீதியாக இடம் இல்லை. நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் மேயருக்கு ஆலோசகர் தேவையில்லை. ஆலோசனை சொல்ல மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உள்ளனர்.


திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறினார். 7 தமிழர் விடுதலை என்றார். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை என அறிவித்தார். இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டதா? 


பிரதமர் மோடி சொல்வதைத்தான் செய்வார் செய்வதைத்தான் சொல்வார். உக்ரைன் போர் முடிந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறப்பட்டது. அதேபோன்று மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறிவித்தது. இதேபோன்று தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை எப்போது குறைக்கப்படும்? 


சட்டப்பேரவையில் திமுக அரசை பாஜக விமர்சிப்பது போன்று வேறு எந்த கட்சியும் விமர்சிப்பது இல்லை. திமுக அரசை கடுமையாக விமர்சித்தால் அதனை சபாநாயகர் எடிட் செய்துவிடுகிறார். சினிமாவில் உள்ளதை போன்றே சட்டப்பேரவையில் ஒரு சென்சார் போர்டே உள்ளது. 


மேலும் படிக்க : பொன்னையன் பாஜகவை விமர்சித்தது மாபெரும் தவறு - கரு.நாகராஜன் ஆவேசம்


திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருகிறது என ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் வித்தியாசமாக இரண்டு அமைச்சர்களின் துறைகளில் ஊழல் நடைபெறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். 


தமிழகத்தில் எப்போதுமே திமுக - அதிமுக எனும் இரு துருவ அரசியல் தான். அதிமுக இப்போதும் எழுச்சியுடன் உள்ளது. மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. பாஜக எங்கோ ஏதோ ஒரு இடத்தில் நடத்தும் கூட்டங்களுக்கு ஆயிரம் பேரோ, இரண்டாயிரம் பேரோ அல்லது ஐந்தாயிரம் பேரோ கூடுவது பெரிய விஷயமல்ல. இது காக்கைகளின் கூட்டம் போன்றது. இரைகளை வீசினால் காக்கைகள் கூடத்தான் செய்யும். அதேபோல் இரை தீர்ந்தால் காக்கைகள் பறந்துவிடும். 


ஆனால், அதிமுகவினுடையது கொள்கை கூட்டம். பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமியெல்லாம் அதிமுக குறித்து பேசுவது வேடிக்கையானது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனித்து நின்றால் அதிமுக தனித்து நிற்க தயாராக உள்ளது. என்னுடைய இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார்கள். 


அண்ணாமலை தமிழகத்தில் அரசியல் செய்கிறார். மத்திய அமைச்சர் முருகன் தலைவராக இருந்தபோது வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. இந்த வரிசையில் பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்துவருகிறார் என நினைக்கிறேன். அதிமுக மீது துரும்பை கொண்டு எறிந்தால் நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என என்பது நினைவில் இருக்க வேண்டும். 


இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார். 


மேலும் படிக்க : பிரபாகரன், வீரப்பனை போல் மாற திட்டம் - யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe