கரூரில் ஓபிஎஸ் அணியச் சேர்ந்த கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் இன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைந்து கொண்டார். மாற்றுக் கட்சியினருக்கு பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து கட்சியின் அடையாள அட்டையை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் அமைந்துள்ளது. மதுரை சாலையில் உள்ள கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுக ஓபிஎஸ் அணி கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் யோகநாதன், பாமக கரூர்  நகர செயலாளர் நடராஜன் ஆகியோருடன் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக கட்சியில், இணையும் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்


பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்ட மாற்றுக் கட்சியினருக்கு பாஜக கரூர் மாவட்ட தலைவர்  செந்தில்நாதன் அவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் குளித்தலை சட்டமன்ற அமைப்பாளர் மீனா வினோத் குமார் , கரூர் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சக்தி முருகன்,  பி.ஆர்.ஆறுமுகம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



இரட்டை இலை சின்னத்தில் போட்டி-  ஒ.பி.எஸ்


அதிமுக ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை காமராசர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வி அடையப்போவது உறுதி, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஏற்கனவே அங்கம் வகித்து உள்ளோம், நாங்கள் தனித்து நிற்கப் போவதில்லை கூட்டணியில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறோம், பத்தாண்டு காலம் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். 


இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடி வருவார், மோடி பிரதமராக வருவதற்கு அனைத்து நிலைகளிலும் ஆதரவு அளித்து வருகிறோம், உலகத்தில் உள்ள 200 வளர்ந்த நாடுகள் மோடியின் நிர்வாகத் திறமையை பாராட்டுகிறது, உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது ஆகவே மோடி பிரதமராக வரவேண்டும் என பாடுபட்டு வருகிறோம், இரட்டை இலை சின்னம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலுக்காக தற்காலிகமாக வழங்கப்பட்டது, அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என இரட்டை இலையை உரிமை கோர முடியும், அந்த உரிமையின் அடிப்படையில் இரட்டை இலையை கேட்போம் எங்களுக்கு தான் இரட்டை இலை கிடைக்கும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் முடிவுகள் வெளியிடப்படும்.


தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடம் இல்லை, நாங்கள் தான் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம், எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பது பொய், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாக்காளர் அடையாள அட்டையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது, புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருக்கிறேன், விஜய்யின் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வாங்குகின்ற வாக்குகளை பொறுத்தே தெரிய வரும். சசிகலா, டி.டி.வி உங்களுடன் ஒன்றிணைந்தால் உங்களுக்கு வீல் பவர் கிடைக்குமா எனும் கேள்விக்கு, பிரிந்திருந்த சக்திகள் ஒன்று சேர்ந்து எனக்கு பவர் கொடுத்து விட்டார்கள்" என கூறினார்.


மேலும் படிக்க | Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்...? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் - விபத்து ஏற்பட்டது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ