KeralaFlood: ஒருமாத சம்பளத்தை வழங்கும் அதிமுக MLA, MP-க்கள்!
அதிமுக MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
அதிமுக MLA, MP-க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தினை கேரளா வெள்ள நிவாரண நிதியாக வழங்குவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர், பவானி ஆறு பாயும் பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். மேலும் பவானி சந்தைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோட்டில் ஆய்வை முடித்து பின் நாமக்கல் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குமாரபாளையத்தில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தினை வழங்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.