மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறி - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்புகள் அவருடைய நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்துகொண்டார். இம்மானுவேல் சேகரனுக்கு நினைவஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டணம் உயர்வால் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி நடப்பதால் என்ன நடக்கும்?... சீமான் கேள்வி
தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.க ஆட்சியில் தியாகிகளை போற்றி வணங்கி வந்தோம். தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் இன கோரிக்கையை நிறைவேற்றி தந்தோம். தி.மு.க., ஆட்சியில் சொத்துவரியை 105 சதவீதம் உயர்த்தினர். தற்போது மின்சார கட்டணத்தை மக்களிடம் கருத்து கேட்காமல் உயர்த்தியுள்ளனர். இதனை தட்டிக்கேட்டால் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் மதிப்பு தருவது இல்லை.
ஆளுங்கட்சிக்கு தலையாட்டி பொம்மையாக எதிர்கட்சிகள் இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர். அ.தி.மு.க., மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும். தி.மு.க., ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்" என தெரிவித்தார். இதேபோல், மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர். திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட தாம்பரம் ரவுடி விவேக் ராஜ் - பின்னணி !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ