வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேரணியாக சென்ற அவர்களை, பாரிமுனை பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


முன்னதாக வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஐகோர்ட் வளாகத்தில் தடுப்புக்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரிமுனை பகுதிகளில் வழக்கறிஞர்களின் பேரணி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. சென்னையின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதால் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புடன், பதற்றமும் நிலவுகிறது. ஐகோர்ட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 


வழக்கறிஞர்கள் போராட்டத்தை முன்னிட்டு ஐகோர்ட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் 350 மத்திய படை வீரர்கள் மற்றும் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.