வரும் 23 ஆம் தேதிக்கு பிறகு நாட்டிற்கே விடிவு காலம் பிறக்கும்: ஸ்டாலின்!
வருகிற மே 23 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே விடிவு காலம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
வருகிற மே 23 ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே விடிவு காலம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அத்திமரப்பட்டி பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மக்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "வருகிற மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே விடிவு காலம் பிறக்கும். மக்களின் பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியின் வெற்றி உறுதியாகிவிட்டது" என்று பேசினார்.
நேற்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.