இன்னும் 2 நாட்களுக்கு கழித்து தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருவதால் அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் குடி, குமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.