வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நாளை 4 இடங்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி கடந்த 11-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைப்பெற்றுத. இரண்டாம் கட்டமாக, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.


தமிழகத்தில் 18-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தேதியில் பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டது.


தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நான்கு இடங்களில் விடுமுறை ரத்து  செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், வாணியம்பாடி பகுதிகளில் விடுமுறை ரத்து செய்யப்பட்டது.



---வேலூர் தேர்தல் ரத்து---


வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு முதல் 30-ஆம் தேதி இரவு வரை துரைமுருகன் வீடு மற்றும் பள்ளி, கல்லூரியில் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 


அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர்.


சோதனையின் போது காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகன் உதவியாளர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான சிமென்ட் குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப் பட்டிருந்த பணம் சிக்கியது. 


பணத்துடன் வாக்களர் பெயர் பட்டியலும் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தொகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அதிரடி திருப்பமாக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுதவதாக அறிவிக்கப்பட்டது.