கடந்த மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தெத்து தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறுகிறது. ஆனாலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதம் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.


பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக 17 இடங்களில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. 


மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுதவிர வேலூர், திருச்சி, மதுரை, கரூரில் உள்ள பரமத்தி ஆகிய இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.


இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவிக்கின்றனர். அதுபோன்றே மக்கள் வெயில் தாக்கத்தால் பெரும் அவதியடைந்து வந்தனர். 


வெயிலுக்கு பயந்து மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அக்னி நட்சத்திரம் முடிவடைந்தாலும் உள் தமிழகத்தில் நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.