மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை தொண்டு செய்து கொண்டாட வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்சியின் உயர்மட்ட தலைவர்களான ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் பிப்ரவரி 24-ஆம் தேதி இங்குள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குவார்கள் என்றும் கட்சி வெளியீடு தெரிவித்துள்ளது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும், அவரது துணை பன்னீர்செல்வம் கட்சி ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர்.


ஜெயலலிதா தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது ஆடம்பரத்தைத் தவிர்க்குமாறு தனது ஆதரவாளர்களை எப்போதும் கேட்டுக்கொண்டார், எனவே கட்சித் தொண்டர்கள் ஆடம்பரங்களை தவிர்த்து ஏழைகளுக்கு நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூலம் அவரது பிறந்தநாளை சிறப்பிக்குமாறு கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. மற்றும் மக்கள் சார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக, தொண்டர்கள் இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும், கண் தானம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும், அவர்களுக்கு உதவிகளை விநியோகிக்க வேண்டும், இலவச திருமணங்களை நடத்த வேண்டும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவரும் அதிமுக-வின் பொதுச்செயலாளருமாக இருந்தவருமான செல்வி ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். அவரது பிறந்தநாள் பிப்ரவரி 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அந்தநாளை அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்தவருடமும் அந்நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.