தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டு பாஜகவை வளர்க்க மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இந்தப் பயணத்தின்போது மக்களிடம் குறைகளை கேட்கும் அவர், இதற்கெல்லாம் இப்போதும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களே காரணம், பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டுவேன் என கூறி வருகிறார். கட்சி வளர்ச்சிக்காக மக்களிடம் இதையெல்லாம் எல்லாக் கட்சிகளும் சொல்வார்கள் என்று அசால்டாக அதிமுக இருந்த சமயத்தில் திமுகவுக்கு நிகராக அதிமுகவையும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. இதுதான் அதிமுகவுக்கு பெரும் சங்கடத்தையும், குமுறலையும் ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவை மட்டும் நேரடியாக விமர்சித்துவிட்டு, அதிமுகவை இலைமறைக்காயாக மறைமுகமாக இதுவரை பேசி வந்த அண்ணாமலை கடந்த சில தினங்களாக சி.வி.சண்முகம் ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே விமர்சித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த முற்போக்கு சிந்தனையாளர் தந்தை பெரியார்!


மேலும், ’ ஆட்சியில் இருக்கும்போது யார் யார் என்னென்ன செய்தார்கள்?, எப்படி வசூலில் ஈடுபட்டார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியும். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை, பதவிக்காக பாஜகவினர் யார் காலையும் பிடிக்க மாட்டோம். என்னவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசக்கூடியவன் இந்த அண்ணாமலை. கட்சியில் இருக்கும் ஜூனியர்களை எல்லாம் பேட்டி கொடுக்க சொல்லி ஒருவரை விமர்சிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேச தயாராக இருக்கிறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை, நேரா வாங்க பேசலாம்.’ என எடப்பாடி பழனிசாமியையும் மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார். மேலும், பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைப்போம், 2026 ஆம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் பேசியிருக்கிறார் அண்ணாமலை. 


அவரின் இந்த பேச்சு அதிமுகவினரை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்தே அண்ணாமலையின் நடவடிக்கைகள் எல்லாம் இருப்பதால், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உடனடியாக இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆட்சியில் இருந்த கட்சியை கூட்டணி தர்மம் என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்தபடி பொதுவெளியில் அண்ணாமலை விமர்சிப்பதால், அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைத்து எப்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது? என கேள்வி எழுப்பியிருக்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள், கூட்டணியை முறித்துக் கொள்வதே சிறந்தது என்ற முடிவில் இருக்கிறார்கள். இப்போது நம்முடைய பலத்தை பாஜகவுக்கு காட்ட தவறினால், அதிமுகவின் வாக்கு வங்கி குறைவதோடு, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவை பாஜக கூட்டணியில் போட்டியிட சொல்வார்கள், இது கட்சிக்கு சரிபட்டு வராது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருக்கிறது. ஆனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை பொறுமை காக்கலாம் என்பது தான் அவருடைய எண்ணமாம். மத்தியில் ஆட்சி மாறினால் அதற்கேற்ப சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வியூகங்களை மாற்றிக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். இருப்பினும் அண்ணாமலையின் இப்படியான பேச்சுக்குப் பிறகு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பதே, அதிமுகவுக்கு பின்னடைவு தான் என கூறும் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதில் கறாராக இருக்கின்றனர். இந்த விஷயத்தில் இப்போதைக்கு குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவில் இருக்கிறாராம். 


மேலும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ