COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்திருக்கும் நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் தமிழகம் வருகை தந்த பிரதமரை எதிர்த்த திமுக, இப்போது என்ன செய்கிறது? என்று கேள்வி எழுப்பினார். 


ALSO READ | அரசு மருத்துவமனையில் புகுந்த பாம்பு, அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்


எதிக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுவதையே திமுக வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவர் சாடினார். கடந்த ஆட்சியில் கவர்னரின் ஆய்வுகளை எதிர்த்து போராட்டங்களை நடத்திய திமுக தற்போது கவர்னர் நடத்தி வரும் ஆய்வுகளையும், அவர் எடுக்கும் முடிவுகளையும் எதிர்க்காமல் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? என்றும் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார். 


ALSO READ | ALSO READ |  Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என அதிமுக வலியுறுத்தியதை இப்போதைய நிதியமைச்சரும் செய்து வருவதாக கூறிய கடம்பூர் ராஜூ, அவ்வாறு ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால் அதனை அதிமுக வரவேற்கும் என்றும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR