சென்னை: அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் துவங்கியது. 


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமையில் துவங்கியது. பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


பொதுக்குழுவில் பங்க்கேற்ற உறுப்பினர்கள்  ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினர். பொதுக்குழுவின் மேடையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை, செங்கோட்டையன், பன்ட்ருடி ராமச்சந்திரன், உள்ளிட்ட 45 பேர் அமர்ந்துள்ளனர்.