அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்கிறார்கள். இதில், செயற்குழு மற்றும் பொதுக்குழு தேதி மற்றும் இக்கூட்டத்தில் நடந்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.


அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை வரும் 29-ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 


பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேருக்கும், செயற்குழு உறுப்பினர்கள் 280 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அழைப்பு கடிதங்கள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.


எனவே, டிசம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.


வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்டுவது வழக்கம். எனவே இந்த ஆண்டும் டிசம்பர் இறுதியில் கூட்ட ஏற்பாடு செய்யப்ப ட்டது. இந்த நிலையில் சசிகலாவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்ப டுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கின் முடிவு வெளியானதும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர்.