இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்ததை அடுத்து, அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள். மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினகரனுக்கு மொத்தம் 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறிவந்த நிலையில், நேற்று  ஆளுநரை சந்தித்து கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர்.


இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம். நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஆகும்.


அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.35 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.