இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி மனு
இன்று ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்த சசிகலா அணி, ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று மாறி மாறி கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் ஓபிஎஸ் அணியினர் கூறியதாவது:-
தாங்களே உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும், மேலும் டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் உள்ளதால் ஆர்.கே. நகரில் போட்டியிடும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது மாஃபா பாண்டியராஜன், செம்மலை, கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்தனர்.