மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தது.


இந்நிலையில் நேற்று மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ளது. வரும் வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு இந்த தீர்மானத்தின் மீது நடக்கவுள்ள விவாதத்தில் மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க பாஜக-விற்கு 314 MP-களின் ஆதரவு தேவைப்படுகிறது.


535 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற மக்களவையில் தற்போதைய நிலவரப்படி பாஜக (சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நீங்கலாக) - 274 உறுப்பினர்கள், சிவசேனா -18, லோக் ஜனசக்தி-6, சிரோன்மணி அகாலிதளம்-3 என மொத்தமாக 313 உறுப்பினர்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 63 உறுப்பினர்களும், அதிமுக 37 உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 34 உறுப்பினர்களும், பிஜு ஜனதா தளம் கட்சியில் 20 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சியில் 16 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியில் 11 உறுப்பினர்களும் உள்ளனர்.


மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் திரினாமுல் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துள்ள நிலையில். அதிமுக ஆதரவு அளிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


காவிரி பிரச்னையின் போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. அதிமுக MP-கள் தான் 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.