அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது, அவை:-
தீர்மானங்கள்:-
இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை.
அதிமுக அணிகள் இணைந்ததற்கு பாராட்டு.
அணிகள் இணைந்த நிலையில் ஒரே கட்சியாக செயல்பட வேண்டும்.
அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தினகரனின் அறிவிப்பு எதுவும் செல்லாது.
ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் அரசின் முடிவுக்கு நன்றி.
யார் யார் என்னென்ன பொறுப்புகளில் இருந்தார்களோ அந்த பதவிகளில் தொடரவும்.
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி.
வார்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.
ஜெயலலிதா மணிமண்டபம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு பாராட்டு.
பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் ரத்து.
அதிமுகவில் இனி பொதுச்செயலர் பதவி கிடையாது.
ஜெயலலிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் இன்று காலையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்குவது, வழிகாட்டும் குழுவிற்கு அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது!
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்த இரு அணிகளும் கடந்த மாதம் 21-ம் தேதி ஒன்றாக இணைந்தன.
இதற்கிடையே அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் தலைமையில் புதிய அணி உருவானது. இந்த அணியால் அதிமுக-வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 750 செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த பொதுக்குழு கூடத்திற்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏ. வெற்றிவேல் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவினை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்தது. மாறாக எம்எல்ஏ. வெற்றிவேல்-க்கு நீந்திமன்ற நேரத்தினை வீணடித்த காரணத்திற்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.