இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனிடம் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் சென்னை வந்து சம்மன் கொடுத்தனர். 


அதை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார்.


சனிக்கிழமை(22-ம் தேதி) பிற்பகல் துவங்கிய விசாரணை 3வது நாளாக நடக்கிறது. அதாவது முதல் நாள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு விசாரணை நீண்ட நேரம் நீடித்தது. மேலும் விசாரணையின் முடிவில் 


தினகரனை இன்று பிற்பகல் மீண்டும் ஆஜாராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் சாணக்கியாபுரி அலுவலகத்துக்கு வருமாறு தினகரனுக்கு போலீசார் 


உத்தரவிட்டுள்ளனர்.