இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் கைதா?
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி இரண்டாக பிளவு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம் அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன.
இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அதிமுக அம்மா அணியின் டிடிவிதினகரனிடமிருந்து ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல்செய்துள்ளது.
இதையடுத்து, லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக, டிடிவி தினகரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.