Tamil Nadu News: இன்று சென்னையில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், திமுக அரசு மீது கடுமையான குற்றசாட்டுகளை வைத்தார். மேலும் தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த அவர்,  புதிய நாடளுமன்ற திறப்பு விழாவிற்கு அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளதால் நாங்கள் கலந்து கொள்கிறோம் எனக் கூறினார். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதை குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய நாடளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக கலந்துகொள்ளும்:
நாடாளுமன்ற திறப்பு விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்வாரா என்பதை அவர்தான் முடிவு செய்வார் என்றார். குடியரசு தலைவர் திறந்து வைக்காத நாடளுமன்ற திறப்பு விழாவிற்கு அதிமுக செல்கிறீர்களே என்ற கேள்விக்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளதால் நாங்கள் கலந்து கொள்கிறோம் எனக் கூறிய அவர், இதை பற்றி அண்ணாமலையிடம் போய் கேளுங்கள் என்றார்.


இன்ப சுற்றுலா சென்றுள்ள  முதலமைச்சர்:
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசுகையில், அவர் பயணம் சென்றதே போட்டோ ஷூட்டிற்காக தான் என்றார். முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஒரு இன்ப சுற்றுலா என விமர்சித்தார். திமுக நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர், துபாய் சென்று முதலீடு பெற்றுவந்தாக கூறும் முதல்வர் இதுவரை 700 நாட்கள் கடந்துவிட்டது. அப்படி கொண்டு வந்த முதலீட்டின் மூலம் எத்தனைபேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த முதலீட்டுள் என்ன என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கையாக கொடுக்க தயார் எனவும் சவால் விட்டார். மேலும் தமிழக மக்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக ஆட்சி தான் பொற்காலம் எனவும் கூறினார்.


சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், திமுக ஆட்சியில் எத்தனையே பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது என அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை குறித்து பேசினார். தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க - அண்ணாமலை மீது கோவை பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்..!


அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:
தங்கம் தென்னரசு விவகாரம் குறித்து கேட்டதற்கு, முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தில் அவரது மகனும் சென்றார் எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக அதிமுக சட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்றார். அணில் செந்தில் பாலாஜி போல் தங்கம் தென்னரசு சரியாக வசூல் செய்து தரவில்லை என்பதால் அவரின் துறை மாற்றப்பட்டது எனக் கூறினார். 


புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்:
தமிழகத்தில் இருந்து செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பது நமக்கு பெருமை எனக்கூறினார். தமிழ் நாட்டின் தொன்மை தொட்டு அடையாளமாக காணப்படுவது செங்கோல் ஆகும். அது நமது தமிழனின் பெருமை மற்றும் தமிழ் நாட்டின் பெருமை. இதில் எந்த அரசியல் செய்ய கூடாது எனவும் கூறினார். 


அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்:
ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குற ஒரு அமைச்சர் உலகத்தில் இருப்பார்களா? எனக் கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருந்த போது மது பாட்டலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கவில்லை. அதை நான் உறுதியாக கூறுவேன் என திட்டவட்டமாக கூறிய அவர், தற்போது அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க - "திமுக ஆட்சி புகைப்பட ஆட்சி"


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ