திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். நவ கிரகங்களில் முக்கிய கிரகமும் சுபகிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வை குருபெயச்சியாக கொண்டாடப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் இடம்பெயரும் நேரத்தில் ஜோதிட சாஸ்திர ரீதியாக 12 ராசிகளுக்கும் பலன்கள் வகுக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி


இந்நிலையில், மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு  குருபெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் சிவாலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் பரிகார மூர்த்தியாக ஸ்ரீ குருபகவான் சன்னதியில் குருபெயர்ச்சி நாளான இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 


இதனை தொடர்ந்து இரவு 11.27 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியானார். அப்போது ஸ்ரீ குருபகவானுக்கு  தங்க கவசம் அணிவிக்கபட்டு, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து ராஜ அலங்காரத்தில் அலங்கார தீபாரதனைய காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாரதனையம் நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று குருபகவானை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | இன்னும் 24 மணி நேரம்..குரு பெயர்ச்சியால் இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ