அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஐந்து மணிவரை நீடிப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உற்சாகம் குறையாமல் மாலை ஐந்து மணிவரை நீடிப்பு.
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று களைகட்டியது. முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காலைக்கும் வ்பீரர்களுக்கும் முதல் அமைச்சர் பல்வேறு பரிசுகளை அறிவித்து வந்தனர். அலங்காநல்லூரில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது.வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அறிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடத்தி வருகின்றனர். ஒரு கலையை ஒருவரே அடக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளையும் வீரர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காலை ஒன்பது மணிமுதல் நான்கு மணிவரை நிகழும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இன்று உற்சாகம் குறையாமல் மாலை ஐந்து மணிவரை நீடிப்பு.