தமிழகத்தில் இன்று பெரும்பாலன மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிற்பகல் வேளைமுதல் இடைவெளி விட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. இதனையடுத்து வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் அருகே மண் சரிவு ஏற்பட்டு செடி, கொடிகள் மண் என சாலையை ஆக்கிரமித்தது, இதன் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, தகவல் அறிந்து வந்த நகராட்சி பணியாளர்கள் மண் சிரிவினை அகற்று பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்கள் இந்த பகுதியில் சிறிது சிரமடைந்து கடந்து சென்று வருகின்றனர், மேலும் சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர், துணை தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மண் சரிவினை அகற்றி வருகின்றனர், மேலும் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகள் மற்றும் நீரோடைகள் தண்ணீர் அதிகரித்தி செல்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ADMK vs BJP: இறங்கி அடிக்கும் அண்ணாமலை, குமுறலில் அதிமுக: குழப்பத்தில் எடப்பாடி


இது தவிர தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் சாரல் மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளின் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை மாநகரின் பல்வேறு பகுதிகளான பழைய மாநகராட்சி அலுவலகம் தமிழ் சாலை சிவன் கோவில் பகுதி, அழகேசபுரம் சண்முகபுரம் மூணாவது மைல் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மற்றும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இரண்டு மணி நேரமாக நீடித்து வரும் இந்த மழை காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.  இந்த மழை காரணமாக மாலை நேரங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் பூஜை பொருட்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது இதன் காரணமாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


வேலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.  வேலூர் மாவட்டத்தில் காலை முதல் 93.0 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் பொதுமக்களை வாட்டி வரைக்கு வந்த சூழ்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், விருபாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், சங்கரன்பளையம், காட்பாடி, சத்துவாச்சாரி, கிரீன்சர்க்கிள்,கொணவட்டம், தொரப்பாடி உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.  இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமின்சாரம் துண்டிக்கப்பட்டது.  சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய வைத்த வண்ணம் வாகனங்களை இயக்கினர்.  மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | சீமான் மீதான புகாரை திரும்பபெற்ற நடிகை விஜயலட்சுமி - நள்ளிரவில் நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ