சென்னை ஈசிஆரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவீரமாக நடைப்பெற்று வருகிறது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் முதல் கோவளம் பகுதிகள் வரை உள்ள கடல் பகுதியில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கும் பணி  மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்று மாலை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகர காவல் துறை மற்றும் தாம்பரம் மாநகர காவல் துறை சார்பில் பல கட்டுபாடுகள் விதித்துள்ள நிலையில் குறிப்பாக கடலில் இறங்கவோ குளிக்க கூடாது என சென்னை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா... இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க!


இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் அதிக அளவு வருவார்கள் இவர்கள் யாரும் கடலில் இறங்கக்கூடாது என்பதால் அப்பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது, மேலும் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட கோபுரங்கள் அமைக்ப்பட்டு வருகிறது. கடல் பகுதியில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடி பாதுகாப்பு முதலுதவிக்காக கடல் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.  மேலும் ஈசிஆர் சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்ட கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, உள்ளிட்ட கட்டுபாடுகளை கண்காணிக்கும் விதமிக ஈசிஆர் சாலையில் பேரிகேடுகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.


மேலும், கடலூர் - புதுச்சேரி எல்லையான ஆல்பேட்டை சோதனை சாவடியில் இன்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  புதுச்சேரியில் இருந்து புத்தாண்டை முன்னிட்டு மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் சோதனை நடைபெற்று வருகிறது.  ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.  ஆட்டோவில் ஏராளமானோர் மது பாட்டில்கள் மற்றும் சாராய பாட்டில்கள் சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததை கண்டுபிடித்து. அவற்றை அந்த இடத்திலேயே போலீசார் ஊற்றி அழித்து எடுத்து வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.  விடிய விடிய இந்த சோதனையானது நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் HELLO POLICE NUMBER 9498100260-க்கு எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியமாக பாதுகாப்பப்படும் என தகவல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


பொதுமக்கள் தொடர்புக்கு:


காவல் கட்டுப்பாட்டு அறை :044-27236111
தொடர்வு எண்:044-27238001
Hello Police: 9498100260


மேலும் படிக்க | தமிழகத்தில் பீதியை கிளப்பும் கொரோனா பரவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ