சேலம் ஏற்காடு மலைப்பாதையில் தொடர் விபத்துகளின் எதிரொலியாக ஏற்காடு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம் ஏற்காடு பிரதான சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அனைத்து கனராக மற்றும் இலகுரக வாகனங்கள் அயோத்திய பட்டணத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு சென்று வருகிறது.  இதனால் அயோத்தியபட்டணம் குப்பனூர் ஏற்காடு சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CBSE Result 2023 மிகப்பெரிய அப்டேட்: இந்த நாளில் வெளிவரும் தேர்வு முடிவுகள்... எப்படி செக் செய்வது?



இந்த நிலையில் நேற்று முன்தினம் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் படுகாயமான நிலையில், இன்று அதிகாலை ஏற்காடு வாழவந்தி பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், 4 பேர் படுகயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மாலை அதே பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில் தொடர் விபத்துகளின் எதிரொலியாக, நடந்த விபத்துகளை ஆய்வு செய்ததில் வாகனங்களில் பிரேக் ஃபெயிலியர் காரணம் என தெரிய வந்துள்ளதால், ஏற்காட்டிற்குச் செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் மலைப்பகுதிகளில் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களின் திறனையும் துறை சார்ந்த அலுவலர்களால் சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வருவதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் பெருகி வருகிறது.  உதகையில் களைக்கட்டும் கோடை சீசன் சுற்றுலா தளங்களில் குடும்பங்களுடன் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.  இதனால் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களான கேரள கர்நாடக போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் நிலா மாடம், பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசித்து செல்பி புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். அரசு ரோஜா பூங்காவிற்கு கடந்த வாரம் முதல் இந்த வாரம் வரை 50,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ரோஜா பூங்காவை கண்டு ரசித்துள்ளனர், இங்கு நிலவும் குளுகுளு காலநிலை வண்ண வண்ண ரோஜாக்கள் கண்களுக்கு விருந்து படைப்பதாகவும் சமவெளி பகுதியில் நிலவும் கடும் வெயிலில் இருந்து தப்பித்து குளுகுளு ஊட்டியில் சுற்றுலா தளங்களை கண்டு ரசிப்பது புது அனுபவமாக உள்ளதென தெரிவித்த சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா கண்களுக்கு விருந்து படைப்பதாகவும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | அனிதா நினைவு அரங்கம்: முதல்வருக்கு அனிதாவின் அண்ணன் நன்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ