ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு..!
கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரிய வாகன ஒட்டிகள் பகலில் முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உறைபொழிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதனால் கடும் குளிர் நிலவியது. சமவெளி பகுதிகளில் உறை பனி பொழிவு காணபட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. அதனுடன் சாரல் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
மேலும் படிக்க | கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ!
சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் அறிந்து கொள்ள பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். மேலும் பனி மூட்டத்தில் காலையில் நகர பகுதி சாலைகள் வெறிச்சோடி காணபடுகிறது. கடுங் குளிர் நிலவுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பனி பொலிவு நிலவு வருகிறது. மாநகரான சென்னையில் கடும் பனி பொழிவு நிலவியது. ஊட்டி போன்ற நிலையில் சென்னை இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர். மேலும் மழை பொழிவும் ஆங்காங்கே இருந்து வருகிறது.
மேலும் படிக்க: இந்தியாவைவிட தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவே - டெல்லியில் பிடிஆர் அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ