புதுவையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிட்டத்தட்ட முழு நாடும் கொரோனா வைரஸின் பிடியில் வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 536 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 69 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் இந்தியா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொடர்பாக நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும்  கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.